பிரேசிலில் கரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்துள்ளது. அங்கு ஒரே மாதத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து பிரேசில் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில்,”பிரேசிலில் கரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்துள்ளது. பிரேசிலில் 20,14,738 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 75,000 பேர்வரை பலியாகி உள்ளனர். 13 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்