பெல்காவி: கர்நாடகா மாநிலத்தில் பெல்காவி மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்த முதியவரின் உடலை சைக்கிளில் இரண்டு கி. மீட்டர் தொலைவுக்கு மகன் எடுத்துச் சென்று அடக்கம் செய்து இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்துள்ளது. பெல்காவி மாவட்டத்தில் கிட்டூரில் இருக்கும் காந்திநகரில் 71 வயது முதியவர் இறந்து விட்டார்.

from Oneindia - thatsTamil