தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் ஊரடங்கு நேரத்தில் ஆசிரியர் தினத்தை வீட்டிலேயே ஓவியம் வரைந்தும்,கவிதை சொல்லியும்,ஆசிரியர் தினத்தின் சிறப்புகளை பேசியும் அசத்தினார்கள். கொரோனா வைரஸ் பரவல் அனைவரையும் முடக்கிப்போட்டு விட்டது. பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் ஐந்து மாதங்களுக்கு மேலாகவே முடங்கியுள்ளனர். ஆன்லைனில் பாடம் படித்தாலும் போட்டிகளும் ஆன்லைனிலேயே வைக்கப்படுகிறது.

from Oneindia - thatsTamil