
பாகிஸ்தானின் ஜியாரத் கார் மலைப்பகுதியில் உள்ள பிரபல சலவைக்கல் சுரங்கத்தின் 6 யூனிட்கள் இடிந்து விழுந்து பெரிய விபத்து ஏற்பட்டதில் 22 பேர் பலியாகியுள்ளனர். 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.
பெஷாவருக்கு 85 கிமீ தொலைவில் உள்ள இந்தச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் பாறைகள் தொழிலாளர்கள் மேல் விழுந்தன. திங்கள் இரவு நிகழ்ந்த கொடூர விபத்தில் 12 சுரங்கத் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே நசுங்கிப் பலியாகினர். காயமடைந்த சிலர் ஆபத்தான நிலையில் சிகிச்சைப்பெற்று வந்ததில் 10 பேர் சிகிச்சைப் பலனின்றி பலியாகினர், இதனால் பலி எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் {

0 Comments