ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 13-வது சீசன் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று தொடங்கின. தொடரின் 2-வது நாளான இன்று துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி, கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்த ஆட்டம் அதிரடி பேட்டிங்கை உள்ளடக்கிய பஞ்சாப் அணியின் பேட்டிங் வரிசைக்கும், வலுவான சுழற்பந்து வீச்சை கொண்ட டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சாளர்களுக்
கும் இடையிலான மோதலாக பார்க்கப்படுகிறது.

ரவிச்சந்திரன் அஸ்வின், அமித் மிஸ்ரா, அக்சர் படேல் ஆகியோரை உள்ளடக்கிய சுழற்பந்து வீச்சு கூட்டணி பஞ்சாப் அணிக்கு கடும் சவால் தரக்கூடும். ஏனெனில் துபாய் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி அணியின் பேட்டிங்கிற்கு ஸ்ரேயஸ் ஐயர், பிருத்வி ஷா, ரிஷப் பந்த், ஷிகர் தவன், சிம்ரன் ஹெட்மைர், அஜிங்க்ய ரஹானே
ஆகியோர் பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்