எங்கள் அணி விளையாடும் ஒவ்வொரு போட்டியின்போது எனக்கு இதயத் துடிப்பு உச்சகட்டத்தில் துடிக்கிறது. எங்கள் அணியின் டாப் 4 பேட்ஸ்மேன்களில் ஒருவர் அடுத்துவரும் போட்டிகளில் ஃபினிஷராக இருக்க வேண்டும் என நம்புகிறேன் என்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் தெரிவித்தார்.

துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் லீக் ஆட்டத்தில் வலிமையான டெல்லி அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வென்றது. முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்தது. 165 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி ஒரு ஓவர் மீதமிருக்கையில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்