சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் நேற்று பெய்ஜிங்கில் கூறியதாவது:

எல்லைப் பகுதியில் இந்திய அரசு, பல்வேறு அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. லடாக் பகுதியில் மிகப்பெரிய நெடுஞ்சாலையை இந்தியா அமைத்து வருகிறது. லடாக் மற்றும் அருணாச்சல் பிரதேச மாநிலங்களில் தற்போது இந்திய அரசு பல்வேறு பாலங்களைக் கட்டி வருகிறது. சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிக்கு எளிதில் செல்லும் வகையில் இந்தப் பாலங்கள் அமைந்துள்ளன. இதுதவிர, எல்லையில் அதிகளவில் துருப்புகளை இந்திய அரசு நிறுத்தியுள்ளது. இதுவே எல்லையில் இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றத்துக்குக் காரணம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் {