முகமது சிராஜ்ஜின் அசரவைக்கும் வேகப்பந்துவீச்சு, சாஹலின் உள்ளிட்ட பந்துவீச்சாளர்களின் அபாரமான பங்களிப்பால் அபு தாபியில் நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 39-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் சேர்த்தது. 85 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளிய இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 13.3 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 85 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்