ஒலிம்பிக் போட்டியின் ஆரம்ப காலகட்டங்களில் ஹாக்கி விளையாட்டு மட்டுமே இந்தியாவுக்கு பதக்கங்களைப் பெற்றுத் தந்துள்ளது. இந்தச் சூழலில், தனிநபர் பிரிவிலும் இந்தியாவால் பதக்கங்களை வெல்ல முடியும் என்று நிரூபித்தவர் கே.டி.ஜாதவ் என்று அழைக்கப்படும் கஷாபா தாதாசாஹேப் ஜாதவ். 1952-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில், மல்யுத்தத்தில் இவர் வென்ற வெண்கலப் பதக்கம்தான் ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் இந்தியாவின் முதல் பதக்கம்.

ஹெல்சிங்கியில் நடந்த இந்த ஒலிம்பிக் போட்டியில் அவர் பங்கேற்பது அத்தனை எளிதாக நடந்துவிடவில்லை. இவர் பங்கேற்பதாக இருந்த ப்ரீஸ்டைல் மல்யுத்த போட்டிக்கு முதலில் நிரஞ்சன் தாஸ் என்பவர்தான் தேர்வு செய்யப்பட்டிருந்தார். இதைக் கேள்விப்பட்டதும் பதறிப் போனார் ஜாதவ். உடனடியாக விளையாட்டுத் துறையில் செல்வாக்கு கொண்ட, பாட்டியாலா மகராஜாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்