அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று 46-வது அதிபராக பதவி ஏற்க இருக்கும் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடனுக்கும், இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட துணை அதிபராக பதவி ஏற்க இருக்கும் கமலா ஹாரிஸுக்கும் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்தனர்.

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 3-ம் தேதி நடந்தது. அதிபர் தேர்தலில் தொடக்கத்திலிருந்தே ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் முன்னிலை வகித்து வந்தார். வெற்றிக்குத் தேவைப்படும் 270 எலெக்ட்ரால் காலேஜில் 266 இடங்கள் பெற்று முன்னிலையில் இருந்தநிலையில், பென்சில்வேனியா மாகாணத்தில் ஜோ பைடன் வெற்றி நேற்று உறுதியானது. இதையடுத்து, 270-க்கும் மேற்பட்ட எலெக்ட்ரால் காலேஜைப் பெற்றதையடுத்து, தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அமெரிக்க ஊடகங்கள் அறிவித்தன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்