அமராவதி: பிரிட்டனிலிருந்து இந்தியா திரும்பிய பெண் கொரோனா நோயாளி, அதிகாரிகளிடம் இருந்து தப்பி ரயில் மூலம் ஆந்திரா சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 24,236 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது வரை நாடு முழுவதும் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.01 கோடியாக அதிகரித்துள்ளது. அவர்களில் 1.46 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.  

from Oneindia - thatsTamil