கொல்கத்தா: பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒரே மேடையில் அரசு நிகழ்ச்சியில் அமர்ந்திருக்க வேண்டிய நிலை இன்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கு ஏற்பட்டது. அப்போதுதான், பாஜக தொண்டர்கள் கூச்சலிட்டதால் ஆவேசம் அடைந்தார் மமதா பானர்ஜி. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 125ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி கொல்கத்தா விக்டோரியா மெமோரியல் ஹால் மண்டபத்துக்கு வெளியே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் தான் இந்த பரபரப்பு சம்பவம் அரங்கேறியது.  

from Oneindia - thatsTamil