போபால்: காதலர் தினம் கொண்டாடியதாக கூறி மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள உணவு விடுதியை 17 பேர் கொண்ட கும்பல் அடித்து நொறுக்கியுள்ளது. உணவு விடுதி உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் தாக்குதல் நடத்தியவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதில் பாஜகவின் முன்னாள் எம்எல்ஏவும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காதலர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது.

from Oneindia - thatsTamil