ஸ்டாக்ஹோம்: மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து தலைநகர் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு, சுவீடன் நாட்டைச் சேர்ந்த 17 வயது இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் ஆதரவு தெரிவித்து உள்ளார். ''இந்தியாவில் போராடி வரும் விவசாயிகளுடன் நாங்கள் இணைந்து நிற்கிறோம்" என்று அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். விவசாயிகளின் போராட்டத்திற்கு நாடு முழுவதும், உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும் தொடர்ந்து ஆதரவு பெருகி வருகிறது.
from Oneindia - thatsTamil

0 Comments