இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்ட நாள் பிப்ரவரி 8. 1994-ம் ஆண்டில் இந்த நாளில்தான் இந்தியாவின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டரும், வேகப்பந்து வீச்சாளருமான கபில்தேவ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 432-வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார். இதன்மூலம் 431 விக்கெட்களை எடுத்திருந்த ரிச்சர்ட் ஹாட்லியின் சாதனையை முறியடித்தார்.

ஒரு காலத்தில் மும்பை, டெல்லி போன்ற பெரு நகரங்களில் இருந்து வருபவர்களும், பணக்காரர்களும்தான் கிரிக்கெட் போட்டிகளில் ஜொலிக்க முடியும் என்ற நிலை இருந்தது. இந்த சூழலில்தான் ஹரியாணாவின் சண்டிகர் நகரிலிருந்து வந்த ஏழை இளைஞரான கபில்தேவ் தோன்றினார். சாதாரண ஏழை இளைஞர்களாலும் கிரிக்கெட்டில் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்த கபில்தேவ், ஒரு கேப்டனாக 1983-ம் ஆண்டில், இந்தியாவின் பெரும் கனவாக கருதப்பட்ட உலகக் கோப்பையை கைப்பற்றினார். சிறந்த கேப்டனாக மட்டுமின்றி, சிறந்த வேகப்பந்து வீச்சாளராகவும் தன்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்று நிரூபித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்