
கூடைப்பந்து விளையாட்டில் ஏகபோக சக்ரவர்த்தியாக இருந்த மைக்கேல் ஜோர்டனின் பிறந்தநாள் இன்று (பிப்ரவரி 17).
விளையாட்டு வீரர்களிலேயே அதிகம் சம்பாதித்தவர் (இவரது சொத்து மதிப்பு 1.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) என்று பெயர்பெற்றவர் மைக்கேல் ஜோர்டன். 1963-ம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் நகரில் பிறந்தார். வங்கி ஊழியரான அவரது அப்பாவுக்கு 1968-ம் ஆண்டில் வடக்கு கரோலினாவுக்கு இடமாற்றம் கிடைக்க, அங்கு குடியேறினார். கூடைப்பந்து வீரரான மேஜிக் ஜான்சனின் ஆட்டங்களால் கவரப்பட்ட மைக்கேல் ஜோர்டன், அவரைப்போன்று தானும் ஒரு சிறந்த கூடைப்பந்து வீரராக விரும்பினார். ஆரம்ப காலகட்டத்தில் தனது தந்தையிடம் பயிற்சி பெற்றார். கூடைப்பந்து விளையாட்டில் மட்டுமின்றி பேஸ்பால் மற்றும் கால்பந்து போட்டிகளிலும் அவர் வல்லவராக இருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments