
இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது டி 20 ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு நடைபெறுகிறது.
இரு அணிகள் இடையே 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடர் 1-1 என சமநிலை வகிக்கிறது. முதல் ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது. இதில் இருந்து மீண்டு வந்த விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நேற்று முன்தினம் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments