
“உன் அப்பாவின் ஆண்டு வருமானம் என்ன?”
சிறுவயதில் வாள்வீச்சில் பயிற்சி பெற விரும்பிய பவானி தேவியிடம், அவரது ஆசிரியர்கள் கேட்ட முதல் கேள்வி இது. வாள்வீச்சு மற்ற விளையாட்டுகளைப் போல் அல்ல. இதற்கான உபகரணங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும். இதற்கு நல்ல வருமானம் இருக்க வேண்டும் என்பதாலேயே பவானி தேவியிடம் இந்தக் கேள்வி கேட்கப்பட்டது. தன் அப்பாவின் வருமானம் குறைவாக இருந்தபோதிலும், வாள்வீச்சுப் பயிற்சியில் சேரவேண்டும் என்ற விருப்பத்தால், அப்பாவின் வருமானத்தை உயர்த்திக் கூறினார் பவானி தேவி. ஆனால் அதன் பிறகு பயிற்சிக்கான உபகரணங்களை வாங்கவும், பயிற்சி பெறவும் மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். அப்படி கஷ்டப்பட்டு பயிற்சி செய்ததன் விளைவாக, இன்று ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments