தஞ்சை: தஞ்சாவூரில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சென்ற பிரச்சார வாகனத்தில் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை ஒரு கூட்டணியாக போட்டியிடுகின்றனர். கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். ஆனால் அவர் தனது கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுக்க சூறாவளி சுற்றுப் பயணத்தை தொடங்கி உள்ளார்.  

from Oneindia - thatsTamil