ஜோப்ரா ஆர்ச்சர், மார் உட், ஜோர்டன் ஆகியோரின் அதிவேகமான பந்துவீச்சால் அகமதாபாத்தில் நேற்று நடந்த முதலாவது டி20 போட்டியில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து அணி.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் மட்டுமேசேர்த்தது. 125 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 15.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்