இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி, ரன்களைக் குவிப்பதில் வல்லவர் என்று எல்லோருக்கும் தெரியும். அதே நேரம் அவரைப் பற்றி அதிகம் தெரியாத விஷயம் ஒன்றும் உள்ளது. கிரிக்கெட்டைப் போலவே பிசினஸ் உலகிலும் விராட் கோலி கெட்டிக்காரர் என்பதே அது.

உடலைக் கட்டுக்கோப்பாக வைப்பதில் அதிக ஆர்வம் செலுத்தும் விராட் கோலி, இதையே பிசினஸாகவும் செய்து வருகிறார். ‘சிசெல்’ என்ற பெயரில் நாட்டில் பல்வேறு இடங்களில் உடற்பயிற்சிக் கூடங்களை அவர் நடத்தி வருகிறார். மிக விரைவில் நாடு முழுவதும் 75 இடங்களில் இந்த உடற்பயிற்சி கூடங்களை விரிவுபடுத்த அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் ‘ராங்’ (Wrogn) என்ற பெயரில் ஃபேஷன் துறையிலும் அவர் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்