மேட்டியோ பெலிகோன் ரேங்கிங் சர்வதேச மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் தரவரிசைப் பட்டியில் பஜ்ரங் புனியா முதலிடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய விரரான விஷால் காளிரமணா வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.

இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற இந்தத் தொடரில் ஆடவருக்கான 65 கிலோ எடைப் பிரிவு இறுதி சுற்றில் இந்தியாவின் பஜ்ரங் புனியா, மங்கோலியாவின் துல்கா துமூர் ஓச்சிரை எதிர்த்து மோதினார். இதில் 0-2 என பின்தங்கியிருந்த பஜ்ரங் ஆட்டம் முடிவடைய 30 நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில் அபாரமாக செயல்பட்டு 2-2 என ஆட்டத்தை முடித்து தங்கப் பதக்கம் வென்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்