ஆலப்புழா: கேரளாவில் தம்பதிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் மணமகனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து பாதுகாப்பு உபகரணங்களுடன் வந்து மணமகன் கையால் மணமகள் தாலி கட்டிக் கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சரத் மோன் மற்றும் அபிராமி. இவர்கள் கைனாகரி என்ற பகுதியைச் சேர்ந்தவர்களாவர். சரத் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார்.

from Oneindia - thatsTamil