
கோகைன் எனப்படும் போதை மருந்தை பயன்படுத்தியதாகக் கூறி அர்ஜென்டினா கால்பந்து வீரர் டியாகோ மரடோனா, இவ்விளையாட்டில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நாள் ஏப்ரல் 26, 1991.
இந்திய கிரிக்கெட்டுக்கு சச்சின் எப்படியோ, அப்படித்தான் அர்ஜென்டினாவின் கால்பந்து விளையாட்டுக்கு டியாகோ மரடோனா. அர்ஜென்டினாவின் புவனஸ் ஏர்ஸ் நகருக்கு அருகில் உள்ள லானஸ் என்ற ஊரில் 1960-ம்ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி பிறந்த மரடோனா, ஏழ்மையால் சூழப்பட்ட பகுதிகளில் தனது சிறு வயதைக் கழித்தார். வறுமையின் பிடியில் இருந்து மீள, கால்பந்து ஒன்றுதான் வழி என்று அவ்விளையாட்டில் ஆர்வம் செலுத்தத் தொடங்கினார். கால்பந்தும் அவரது கால்களுக்கு கட்டுப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments