போர்பந்தர்: அரபிக் கடலில் உருவாகி உள்ள அதிதீவிர டவ்-தே புயல் நாளை அதிகாலை குஜராத்தின் போர்பந்தர்- மஹூவா இடையே கரையை கடக்கிறது. இதனால் குஜராத் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. லட்சத்தீவு அருகே உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது டவ்-தே புயலாக வலுவடைந்தது. இந்த புயல் தற்போது அதிதீவிர புயலாகி உள்ளது.
from Oneindia - thatsTamil

0 Comments