திண்டிவனம்: தான் வசிக்கும் தைலாபுரம் தோட்டத்தில் மரங்கள் மூலம் ஆக்சிஜன் கிடைப்பது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில் நான் வாழும் தைலாபுரம் தோட்ட வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. அங்கு உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் தான் உலகின் தூய்மையான ஆக்சிஜன் ஆகும்.

from Oneindia - thatsTamil