செங்கல்பட்டு: தனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டதால் மனமுடைந்த கல்லூரி மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் செங்கல்பட்டில் நடந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் ஆலப்பாக்கம் அருகே உள்ள மலையடி வெண்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன். சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் டிரைவராக வேலை செய்கிறார்கள் இவருடைய மகள் சுவேதா (வயது 20).

from Oneindia - thatsTamil