கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற்கு வங்கத்துக்கு குறைவான தடுப்பூசிகளே வழங்கப்படுகின்றன என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். கட்டுக்கடங்காமல் திரியும் கொரோனாவை அடக்குவதற்கான ஒரே பேராயுதம் தடுப்பூசிதான். இந்தியாவை பொறுத்தவரை மாநிலங்களுக்கு மத்திய அரசுதான் தடுப்பூசிகளை சப்ளை செய்து வருகிறது. ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களில் அதிக தடுப்பூசிகள் ஒதுக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
from Oneindia - thatsTamil

0 Comments