டோக்கியோ: டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு ரூ 2 கோடி ஊக்கப் பரிசை அறிவித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியச் சார்பில் 9 வகையான போட்டிகளில் மொத்தம் 59 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

from Oneindia - thatsTamil