சண்டிகர்: கோபமாக இருந்த சித்துவை ஒருவழியாக சமாதானப்படுத்தி உள்ளனர்.. சித்து தன்னுடைய ராஜினாமாவை திரும்ப பெற்று கொண்டதாகவும், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக தொடர்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.. இதையடுத்து பஞ்சாப் மாநில அரசியல் மீண்டும் சூடுபிடித்துள்ளது. 4 வருடங்களாக எந்தவித சிக்கலும் இல்லாமல் சென்று கொண்டிருந்த பஞ்சாப் மாநில அரசியலில் புதுபுது திருப்பங்கள் தற்போது நிகழ்ந்து வருகின்றன.

from Oneindia - thatsTamil