டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமை புதன்கிழமை இரவு தெரிவித்திருந்தது. மன்மோகன் சிங் விரைவில் குணமடையவும் நலமுடன் இருக்கவும் தாம் பிராத்திப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.
from Oneindia - thatsTamil

0 Comments