காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் தனியார் விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்பட்டதால், உடல்நலம் பாதிக்கப்பட்டதாகக் கூறி, பெண் தொழிலாளர்கள் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஸ்ரீபெரும்புதூர் அருகில் உள்ள சுங்குவார்சத்திரத்தில் ஃபாக்ஸ்கான் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு சுமார் ஐயாயிரம் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

from Oneindia - thatsTamil