அமிருதசரஸ்: முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் மாநில மூத்த தலைவருமான அஸ்வனி குமார் அக்கட்சியிலிருந்து விலகினார். இவர் 45 ஆண்டுகள் கழித்து காங்கிரஸிலிருந்து விலகியுள்ளார். மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது மத்திய சட்டத் துறை அமைச்சராக இருந்தவர் அஸ்வனி குமார். இவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நெருக்கமானவர் என கருதப்படுகிறது.
from Oneindia - thatsTamil

0 Comments