செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள திரு.வி.க.நகர், அருணாகுளம் பகுதிகளில் ஏரியை ஒட்டி அமைந்துள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகளை அகற்ற வருவாய்த் துறையும் பொதுப் பணித் துறையும் முடிவுசெய்துள்ளன. பல ஆண்டுகளாக இங்கு வசிப்பவர்கள், எங்கு செல்வதென கேள்வியெழுப்புகிறார்கள். கட்டடப் பணிகளில் சித்தாளாக வேலைபார்த்துவரும் சுலோச்சனா, தனது வீட்டை இடிக்கப்போவதாக நோட்டீஸ் வந்ததைப் பார்த்து அதிர்ந்துபோயிருக்கிறார்.

from Oneindia - thatsTamil