பாஸ்டன்: அமெரிக்க நாட்டில் காலம்காலமாக நடத்தப்பட்டு வரும் பாஸ்டன் மாரத்தான் ஓட்டத்தில் வெறும் நான்கு நொடிகள் வித்தியாசத்தில் மகளிர் பிரிவில் முதலிடம் பிடித்துள்ளார் கென்ய வீராங்கனை பெரெஸ் ஜெப்சிர்சிர்.

சுமார் 124 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் உலகின் பாரம்பரியமிக்க மாரத்தான் ஓட்டத் தொடர்களில் பாஸ்டன் மாரத்தானும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தின் மூன்றாவது திங்கள்கிழமைகளில் இந்த மாரத்தான் ஓட்டம் ஆரம்பமாகவும். அதன்படி நடப்பு ஆண்டுக்கான மாரத்தான் ஓட்டம் கடந்த 18 ஆம் தேதியன்று தொடங்கியது. கரோனா காரணமாக 2020-ல் இந்தப் போட்டி நடத்தப்படவில்லை. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடத்தப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்