உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே வீட்டில் டைல்ஸ் பதிக்கும் வேலை செய்ய வந்த வடமாநில இளைஞர் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் அருகே மண்ணில் இருந்து ரத்தம் வெளியேறி உறைந்து கிடந்ததைப் பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உளுந்தூர்பேட்டையில் வடமாநில இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

from Oneindia - thatsTamil