கடந்த 31-ம் தேதி இரவு நடைபெற்ற மகளிர் யூரோ கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது இங்கிலாந்து அணி. இந்தப் போட்டியில் அணிக்காக இரண்டாவது கோலை தான் பதிவு செய்ததை கொண்டாடும் விதமாக தனது டி-ஷர்ட்டை கழற்றி சுழற்றியபடி மைதானம் முழுவதும் ஒரு ரவுண்டு வந்தார் இங்கிலாந்து வீராங்கனை க்ளூய் கெலி (Chloe Kelly). அவரது அந்த படம்தான் இப்போது மகளிருக்கான அதிகாரத்தின் அடையாளம் என கருதி உலக அளவில் பெண்கள் பலரும் போற்றி வருகின்றனர். அது குறித்து விரிவாகப் பார்ப்போம்.

அவர் ஸ்போர்ட்ஸ் பிரா (மேலங்கி) அணிந்தபடி மைதானத்தை வலம் வந்த காட்சிதான் இந்தத் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. "தசாப்தத்தின் சிறந்த பெண்ணியப் பிம்பம்" என இந்தப் படம் போற்றப்படுகிறது. அதோடு, இந்த ஒற்றைப்படம் பல தடைகளை உடைத்தெறியும் வகையில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. விளையாட்டில் பெண்களுக்கு உள்ள ஆடை கட்டுப்பாடு, கால்பந்தில் மகளிருக்கான பிரதிநிதித்துவம், அவர்கள் உடல் மீதான அவர்களது உரிமைகள் போன்றவை இதில் அடங்கும் என சொல்லப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்