பனாஜி: கோவா மாநில காங்கிரஸ் கட்சி கூண்டோடு காலியாகிவிட்டது. அம்மாநிலத்தில் 11 எம்.எல்.ஏக்களில் 8 பேர் பாஜகவுக்கு தாவிவிட்டதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சி செல்வாக்கு பெற்றுள்ள மாநிலங்களில் கோவாவும் ஒன்று. ஆனால் உட்கட்சி மோதல்களால் கோவாவில் காங்கிரஸ் கட்சியால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. காங்கிரஸ் கோஷ்டி பூசல்களால் ஒவ்வொரு தேர்தலின் போதும் பாஜகதான் ஆதாயம் அடைந்து வருகிறது.
from Oneindia - thatsTamil

0 Comments