
ஹோபார்ட்: நடப்பு டி20 உலகக் கோப்பையில் முதல் சுற்றோடு வெளியேறி உள்ளது இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி. அதே நேரத்தில் அடுத்த சுற்றான சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறி உள்ளது அயர்லாந்து அணி.
ஆஸ்திரேலிய நாட்டில் டி20 உலகக் கோப்பை 2022 தொடர் நடைபெற்று வருகிறது. தற்போது முதல் சுற்று போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ‘குரூப் பி’ பிரிவில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அயர்லாந்து அணிகள் ஹோபார்ட் நகரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இன்று விளையாடின. இரண்டு அணிகளும் இந்த பிரிவில் விளையாடிய இரண்டு போட்டிகளில் தலா ஒரு வெற்றி பெற்றிருந்தன. அதனால் இந்த போட்டியில் வெல்லும் அணி அடுத்த சுற்றுக்கும், தோல்வியை தழுவும் அணி தொடரை விட்டு வெளியேற வேண்டிய நிலையும் இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments