எதிர்வரும் 23-ம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் மோதி விளையாட உள்ளன. இரு அணிகளுக்கும் இதுவே இந்த தொடரில் முதல் போட்டி. இந்நிலையில், இந்த போட்டியை புரோமொட் செய்துள்ளார் ஹாலிவுட் நடிகரும், தொழில்முறை மல்யுத்த (WWE) வீரருமான டுவைன் ஜான்சன். இவரை ரசிகர்கள் ‘தி ராக்’ என அன்போடு அழைப்பது வழக்கம்.

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி உள்ளது. இந்தியா உட்பட மொத்தம் 16 அணிகள் இதில் பங்கேற்றுள்ளன. முதல் சுற்று, சூப்பர் 12, அரையிறுதி மற்றும் இறுதி என மொத்தம் 45 போட்டிகள் இதில் அடங்கும். இதில் ஒன்று தான் வரும் ஞாயிறு அன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை செய்ய உள்ள போட்டி.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்