
சட்டோகிராமில் நடைபெறும் இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன் முதல் சதத்தை எடுத்தார். இந்திய அணி 452 ரன்கள் என்ற வலுவான முன்னிலையைப் பெற்று வெற்றிக்கு அடிக்கல் நாட்டியுள்ளது.
சட்டோகிராம் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாளான இன்று குல்தீப் யாதவ் தன் 5-வது விக்கெட்டைக் கைப்பற்ற வங்கதேச அணி தன் முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்குச் சுருண்டது. அதன்பிறகு ஆடிய இந்திய அணியில் கே.எல்.ராகுல் மீண்டும் 23 ரன்களில் புல் ஷாட்டில் கையில் கேட்ச்சைக் கொடுத்து விட்டு ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments