
சிட்டகாங்: இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் நடப்பு டி20 உலக சாம்பியனான இங்கிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது வங்கதேசம். 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி உள்ளது வங்கதேசம்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து வென்றது. இந்நிலையில், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று துவங்கியது. இந்தப் போட்டி சிட்டகாங் நகரில் நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments