மும்பை: எதிர்வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக வரும் ஜூன் 7-ம் தேதி இங்கிலாந்தில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இந்த இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.

கிரிக்கெட் உலகில் ஃப்ரான்சைஸ் கிரிக்கெட் கவனம் பெற்று வரும் சூழலில் அடுத்தடுத்து இரண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் அணி என்ற அந்தஸ்தை இதன் மூலம் இந்திய அணி பெறுகிறது. கடந்த முறை நியூஸிலாந்து அணிக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி விளையாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்