உலகளவில் கரோனா பரிசோதனை அதிகமாகச் செய்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும், அடுத்தார்போல் இந்தியாதான் அதிகமான பரிசோதனை செய்து 2-வது இடத்தில் உள்ளது வரவேற்கக்கூடியது என்று அமெரிக்க அதிபர் டொனாலாட் ட்ர்ம்ப் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ், அமெரிக்காவில்தான் மோசமான சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை அந்நாட்டில் கரோனாவால் 38 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், 1.40 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் கரோனா வைரஸ் பரவல் அந்நாட்டில் குறைந்தபாடில்லை, பலமாநிலங்களில் தீவரமாகப் பரவி வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் {