விசாகப்பட்டினம்: ஆந்திரப்பிரதேச மாநிலம், விசாகப்பட்டினத்தில் இருக்கும் கப்பல் தளத்தில் கிரேன் உடைந்ததில் 11 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார். முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உடனடி விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து, உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாக விசாகப்பட்டினம் மாவட்டக் கலெக்டர் வினய் சந்த் தெரிவித்துள்ளார். இந்த செய்தியை போலீஸ் துணை கமிஷனர் சுரேஷ் பாபு உறுதிபடுத்தியுள்ளார்.
from Oneindia - thatsTamil

0 Comments