இந்தியாவின் லடாக் உட்பட பல எல்லைப் பகுதிகளில் சீன ராணுவம் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இதற்கு இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவில் வாழும் இந்திய அமெரிக்கர்கள் நேற்றுமுன்தினம் சீனாவைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தலைநகர் வாஷிங்டன் மற்றும் பிற நகரங்களில் இருந்து வந்த ஏராளமான அமெரிக்க இந்தியர்கள் பிரபலமான நேஷனல் மால் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, சீனாவில் உய்குர் முஸ்லிம் மக்களை சீன கம்யூனிஸ்ட் அரசு ஒடுக்கி வருவது மற்றும் அவர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களைக் கண்டித்து கண்டன குரல் எழுப்பினர். கரோனா பரவல் காரணமாக, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தனர். மேலும் அமைதியான முறையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சீனாவுக்கு எதிரான கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி இந்திய அமெரிக்கர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் {