
இங்கிலாந்தில் கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு சுமார் 13,000 டாலர்வரை அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறும்போது, “பிரிட்டன் இவ்வாரம் கரோனா பரவலின் இரண்டாம் கட்டத்தை எதிர் கொள்ளும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனவே கரோனா பரவலை தடுப்பதற்கு சரியான வழி விதிமுறைகளை கடைபிடிப்பதுதான். எனவே இங்கிலாந்து முழுவதும் கரோனா பரவலை தடுப்பதற்கு புதிய வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. எனவே தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட விதிமுறைகளை மீறுபவர்களுக்கு 13,000 டாலர்வரை அபராதம் விதிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments