கொல்கத்தா: மேற்கு வங்க காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை நியமித்து காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்பிக்கள் குழுவின் தலைவராகவும் ரஞ்சன் இருந்து வருகிறார். இதற்கு முன்னர் மேற்கு வங்க மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த சோமன் மித்ரா காலமானார்.

from Oneindia - thatsTamil