ஸ்ரீநகர்: கிழக்கு லடாக்கில் இந்தியாவும் சீனாவும் பெரும் மோதலில் ஈடுபட்டுள்ள நேரத்தில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சிகளைத் தடுக்க இந்திய இராணுவம் 3,000 க்கும் மேற்பட்ட கூடுதல் ராணுவ வீர்ர்களை எல்லையில் (எல்ஓசி) நிறுத்தியுள்ளது. ஊடுருவல் முயற்சிகளைத் தடுக்க காஷ்மீர் பகுதியில் கூடுதல் வீரர்கள் முதன்மையாக கட்டுப்பாட்டு லைனில் நிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் உயர் வட்டாரங்கள் தெரிவித்தன.

from Oneindia - thatsTamil