
மெக்சிகோவில் கரோனாவுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 66,851 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மெக்சிகோ சுகாதாரத் துறை தரப்பில், “கடந்த 24 மணி நேரத்தில் 522 பேர் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 66,851 ஆக அதிகரித்துள்ளது. மேலும், நேற்று ஒரு நாளில் 6,197 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்கு கரோனா தொற்று எண்ணிக்கை 6 லட்சத்தைக் கடந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் {

0 Comments